Posts

Showing posts from October, 2026

47 - மண்ணுக்கு மண் இட்ட மாறனேர் நம்பி

Image
4 7 - மண்ணுக்கு மண் இட்ட மாறனேர் நம்பி திருவனந்தபுரத்து எம்பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு, கைநழுவிப்போன யோக நெறியின் ஏக்கத்தோடும், விசிஷ்டாத்வைத தர்சனத்தை ஆளப்போகும் அந்தப் 'பவிஷ்யதாசாரியரை' இன்னும் கண்டடைய முடியவில்லையே என்ற உள்ளத் தவிப்போடும் ஆளவந்தார் தம் சீடர் குழாமுடன் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார். தென்நாட்டு எல்லைகளைக் கடந்து, வழியிலிருந்த திவ்யதேசங்களை ஆழ்வார் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்தவாறே பாண்டி நாட்டைத் தாண்டி வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் 'புராந்தகம்' (3) என்னும் அமைதியான கிராமத்தின் அருகே அவர்கள் வந்து சேர்ந்தத சமயம், நண்பகல் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. வழியோரத்தில் தழைத்து விரிந்திருந்த பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று, பயணக் களைப்பைப் போக்கும் பசுங்குடையாகக் குளிர்நிழல் பரப்பி நின்றது. திருக்குருகூரில் நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் வீற்றிருந்த 'திருப்புளி' மரத்தை நினைவூட்டுவது போல, அந்தப் புளியமரம் பச்சைப் பசேலென்ற இலைகளுடன் அகன்று விரிந்து காட்சியளித்தது. அதைக் கண்ட ஆளவந்தார் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அஞ்சலி செய...

46 - கால தேவனின் கணக்கு

Image
46 - கால தேவனின் கணக்கு திருவரங்கத்தில் மடத்தையும் அரங்கனையும் கவனித்துக்கொள்ளுமாறு தெய்வவாரியாண்டானை நியமித்துவிட்டு ஆளவந்தார் திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டார். ஆனால் ஆண்டானுக்கோ ஆளவந்தாரைக் காணாமல் இருப்பே கொள்ளவில்லை. அவர் ஏங்கி, நோய்வாய்ப்பட்டுக் கிடக்க, மடத்து முதலிகள் அவரை ஒரு கட்டணத்தில் வைத்துத் திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டார்கள். திருவனந்தபுரம் நெருங்க நெருங்க ஆண்டான் புத்துணர்ச்சி பெற்று… எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்த ஆண்டான் சட்டென்று கட்டிலிலிருந்து கீழே குதித்து வேகமாக நடக்கத் தொடங்கியதும், சுமந்துவந்த முதலிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். "ஆண்டானே! நில்லுங்கள்! நில்லுங்கள்!" என்று அவர்கள் கூவியபடி பின்னால் ஓடிவர, தெய்வவாரியாண்டானின் கவனமோ எதிலும் பதியவில்லை. தன் உயிரையே தன்னிடம் மீட்டுத் தந்த ஆசாரியரின் திருவடிகளை நோக்கி, உடலின் எல்லைகளையெல்லாம் கடந்த ஒரு பேராற்றல் அவரை உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழிக் கணவாயைக் கடந்து, திருப்பதிசாரத்தின் பசுஞ்சோலைகளையும் தாண்டி, மணற்பாதைகளில் ஓட்டமும் நடையுமாக அனந்தபுரத்துத் திசையை நோக்கி விரைந்த...

45 - சஞ்சீவினித் தென்றல்

Image
45 - சஞ்சீவினித் தென்றல் ஆளவந்தாரும் அவருடைய சீடர்களும், ஆழ்வார்திருநகரியிலிருந்து தென்மேற்கே வானமாமலை (நாங்குநேரி) தோதாத்ரிப் பெருமாளையும் சேவித்துவிட்டு, பொதிகை மலைச்சாரலில் அமைந்த திருக்குறுங்குடி நம்பிகோயிலை அடைந்தார்கள். திருமங்கையாழ்வார் பரமபதம் அடைந்த அந்தப் புனிதமான இடத்தில் நின்று நம்பிப் பெருமாளைத் தொழுதபோது, அவருடைய கண்முன்னே ஒரு பிரம்மாண்டமான இயற்கை அரண் எழுந்து நின்றது! அதுதான் விண்ணை முட்டும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்! விண்ணைத் தொட்டு நிற்கும் பொதிகை மலையும் மகேந்திரகிரியும் சுவர் போல எழுந்து, மலைநாட்டிற்குள் நுழைய விடாமல் வழியை அடைத்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அந்தச் செங்குத்தான பாறைச் சரிவுகளிலும் அடர்ந்த வனங்களிலும் ஏறி மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடப்பது என்பது இயலாத காரியம். அப்போது அங்கே ஆடு மேய்க்கும் உள்ளூர் ஆயர்களின் வழிகாட்டுதலால், ஆளவந்தார் தம் சீடர்களுடன் மலைகளைக் கடக்க முயலாமல், இயற்கையாகவே இரு பெரும் மலைகளுக்கு இடையே பிளந்து அமைந்திருந்த ஒரு சமவெளிப் பெருவழியை அடைந்தார். அதுவே ஆரல்வாய்மொழிப் பெருவழி! மேற்கே மகேந்திரகிரியும், கிழக்கே மருந்துவாழ் மலையும் ...