Posts

34 - ஆளவந்தார்

Image
34 - ஆளவந்தார் யமுனைத்துறைவர் புன்னகையோடு, “நிச்சயமாக முடியும் அரசே! லௌகீமாகவும், தர்ம சாஸ்திர விதிகளின்படி அடியேன் அந்த மூன்று வாக்கியங்களையும் மறுத்துக் காட்டுகிறேன், கேட்பீராக!” என்று தொடர்ந்தார். “முதலாவது வாக்கியம்: வாழையானது தன் வாழ்நாளில் ஒரேயொரு குலையை மட்டும் ஈன்றுவிட்டு மடிவது போல, இந்த வித்துவானின் தாயும் இவரொருவரை மட்டுமே பெற்றெடுத்துள்ளார். உலக வழக்கிலே, 'ஒரு பிள்ளையானது பிள்ளையல்ல, ஒரு மரமும் தோப்பல்ல' என்று சொல்லுவது உண்டு அல்லவா? அப்படி ஒரேயொரு வாரிசைப் பெற்றெடுத்த தாயை, உலக வழக்கிலே ‘வாழை மலடு’ என்றே வேடிக்கையாகக் குறிப்பிடும் மரபு உண்டு. அதனால் ஒரேயொரு புதல்வனைப் பெற்ற தாயை உலக வழக்கின்படி மலடி என்று மறுத்து உரைக்கலாம்! அதுமட்டுமல்லாமல், ‘அபுத்ரஸ்ய கதிர்நாஸ்தி’ (புத்திரன் இல்லாதவனுக்கு நற்கதி இல்லை) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உலகத்தில் தாய் தந்தையர் தங்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்றே தவமிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கிறார்கள். அப்படியிருக்க, மகனாகப் பிறந்தவன் பெற்றோருக்கு நற்கதியளிக்கும் நற்குணங்கள் இல்லாதவனாய் வீணே வாழ்வைக் கழித்தால், அவர்களுடைய எண்ண...

33 - வாதப் போர்

Image
33 - வாதப் போர் சோழ ராஜ சபையின் வாயிலை அடைந்த யமுனைத்துறைவர், பல்லக்கிலிருந்து கீழே இறங்காமல், தன் கைப்பட எழுதிய மற்றொரு புதிய ஓலைச் சீட்டை அங்கே இருந்த சேவர்கள் மூலம் அரசவைக்குள் கொடுத்தனுப்பினார். அரசவையில் இருந்த ஆக்கியாழ்வான் அந்த ஓலையை வாங்கிப் படித்து, கோபாவேசத்தால் அவனது உடல் நடுங்கத் தொடங்கியது. கண்கள் சிவக்க, "இப்படியொரு ஆணவ வரிகளா! இப்படி எழுதி அனுப்பிய அந்தப் பாலகனை இன்று வாதப் போரில் வென்று, அவனது தலை மீது ஏறி மிதித்துக் கிழித்தெறியப் போகறேன்!" என்று கத்தியவாறு, அந்த ஓலைச் சீட்டை மன்னனிடம் கொடுத்தான். அரசன் அந்த ஓலையைத் தன் கைகளில் வாங்கி, சபையிலிருந்த அனைவரும் கேட்கும்படியாக உரத்த குரலில் வாசித்தான்... “மின்னல் போன்ற பேரொளி வீசும் இமயமலைச் சாரலிலே, மலையரசனின் மகளான அன்னை பார்வதி தேவியின் தளிரடிகள் பட்டுச் சிறந்து விளங்கும் இமயம் முதல்... அன்னப் பறவையின் மென்னடை கொண்ட சீதாபிராட்டி கொடிய அரக்கனால் அபகரிக்கப்பட்ட பின், அவர்தம் திருமுகம் மீண்டும் மலர்வதற்குக் காரணமாக விளங்கிய உன்னத சேதுக்கரை வரையிலும்... மற்றும், சந்திரனும் சூரியனும் தங்களின் தலை அணிகலனாகக் கொண்டு வி...

32 - கிழிந்த ஓலை!

Image
32 - கிழிந்த ஓலை! ஒப்பற்ற பெருமை பொருந்திய நமது நாதமுனிகளின் திருக்குமாரரான ஈஸ்வர முனிகளின் புதல்வனான யமுனைத்துறைவனைக் காண வேண்டும் என்ற பேராவலோடு, மணக்கால் நம்பி காட்டுமன்னார்கோவில் நோக்கிப் புறப்பட்ட அதே சமயம்... வீரநாராயணபுரத்து ஏரிக்கரையோரம், எழில் கொஞ்சும் நந்தவனத்தின் நடுவே அமைந்திருந்த ஒரு பன்னசாலைக் குடிசையின் திண்ணையிலே, மஹாபாஷ்ய பட்டர் அமர்ந்திருந்தார். அவர் அங்கு வீற்றிருந்த மரப்பீடத்தின் மீதமர்ந்து, தன் மாணவர்களுக்கு விசேஷமான சாஸ்திர பாடங்களை உபதேசித்துக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் மிகுந்த உன்னிப்போடு கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள், தம் குருநாதர் சொல்லச் சொல்ல, கைகளிலிருந்த எழுத்தாணிகளைக் கொண்டு பனை ஓலைகளில் மிக வேகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அக்கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் மட்டும் கையில் எழுத்தாணியை எடுக்காமல், எதையும் எழுதாமல், குருவின் திருவாக்குகளைத் தன் செவிகளாலும் நெஞ்சினாலும் மட்டுமே பருகியவாறு அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அந்தத் தனித்துவமிக்க மாணவன் வேறு யாருமல்லர்; நாதமுனிகளின் பேரனாரான யமுனைத்துறைவனேதான்! ஒரு கட்டத்தில், பட்டர் பாடம் சொல்வதை நடுவே...

31 - யமுனைத் துறைவன்

Image
31 - யமுனைத் துறைவன் உய்யக்கொண்டரின் பிரிவுக்குப் பின் மணக்கால் நம்பி தன் ஆசாரியர் தனக்கு இட்ட கட்டளையின்படி திருவரங்கத்திலேயே நித்தியவாசம் செய்யத் தொடங்கினார். , தன் சரீரப் பற்றுகளை முழுமையாகத் துறந்து, துறவற நெறியினை மேற்கொண்டார்.(1) திருவரங்க நாதனின் எல்லையற்ற கருணையினாலும், தன் ஆசாரியனின் ஆசியினாலும் வைணவச் சம்பிரதாயத்தை வளர்த்து, அடியவர்கள் பலரையும் நல்வழியில் நடத்தி வந்தார். இவ்வாறாகச் சில காலம் கடந்து சென்றது. ஒரு நாள், மணக்கால் நம்பி தன் மடத்திலே சீடர்களுக்கு குலசேகர ஆழ்வார் அருளிச்செய்த ‘பெருமாள் திருமொழி’ பாசுரங்களை காலக்ஷேபமாக உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய அணுக்கச் சீடர்களுள் ஒருவரான ‘திருமகிழ் மாலை மார்பன்’(2) என்பவர் மடத்திற்குள் நுழைந்தார். தன் ஆசாரியரின் காலக்ஷேப உரையைத் தடை செய்ய விரும்பாத அவர், வாயிற்கதவின் அருகே மிகவும் பவ்யமாக வந்து நின்றார். அச்சமயம், மடத்தின் உள்ளே மணக்கால் நம்பி, குலசேகர மன்னனின் எல்லையற்ற பாகவத பக்தியின் மேன்மையை இப்படிப்படி விளக்கிக் கொண்டிருந்தார்: “சீடர்களே! குலசேகர மன்னரின் அரண்மனையிலிருந்த விலைமதிப்பற்ற நவரத்தின மாலை ஒன்று ஒர...

30 - தாமரை

Image
30 - தாமரை “அடியேனுக்குப் பரமபதத்தின் திவ்யமான படிக்கட்டுகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன!” என்று ஆசாரியர் ஸ்ரீ உய்யக்கொண்டார் உரைத்ததைக் கேட்ட மணக்கால் நம்பி, எல்லையற்ற துயரத்தால் நெஞ்சுருகி நின்றார். தன் ஆசாரியனைப் பிரிந்து வாடப் போகும் அந்தத் தவிப்பில், என்ன செய்வதென்று அறியாமல் கைபிசைந்து திகைத்தார். மற்ற சீடர்களும் சோகக் கடலில் மூழ்கி அழுதுகொண்டிருந்தனர். அச்சமயம் மணக்கால் நம்பி, கண்களில் நீர் மல்க, “எந்தையே! தேவரீர் திருநாட்டுக்கு (பரமபதத்திற்கு) எழுந்தருளிவிட்டால், அதற்குப் பின்பு எமது உன்னதமான வைணவ சம்பிரதாயத்தை நெஞ்சுரத்தோடும் ஆசாரிய பக்தியோடும் வழிநடத்திச் செல்லப் போகும் தகுதி படைத்தவர்கள் யார்? இந்த ஏழைகளைத் தவிக்கவிட்டு எங்கு செல்கிறீர்கள் ஆசாரியரே?” என்று தன் வேதனை நெஞ்சினைச் சுட, விம்மி விம்மி அழுதுகொண்டே கேட்டார். உய்யக்கொண்டார் தன் கருணை பொழியும் கண்களால் மணக்கால் நம்பியை நோக்கினார். அவர்தம் வலக்கரத்தை மெல்ல உயர்த்தி, அன்போடு நம்பியைத் தன்பால் அழைத்து உரைக்கத் தொடங்கினார்: “மணக்கால் நம்பியே! நம் முன்னோர்கள் ‘பருத்தி பட்ட பன்னிரண்டு படல்’(1) என்பார்கள். பருத்திக்கொட்டையை ...

29 - அரங்கேற்றம்

Image
29 - அரங்கேற்றம் கம்பரின் கம்பீரமான குரலில் இராமாயணக் கதையமுதத்தை மக்கள் சுவைத்துக்கொண்டிருந்த வேளையிலே, ஒரு நாள் அவர் ‘இரணிய வதைப் படலத்தை’ப் பாடத் தொடங்கினார். அப்போது திருவோலக்கத்திலிருந்த சான்றோர்களில் சிலர் எழுந்து குறுக்கிட்டனர். “கம்பனே! நீர் பாடிய இந்த இரணிய வதை வர்ணனைகள் பக்திச் சுவையோடு மிக அழகாக இருந்தாலும், இது வால்மீகியின் மூல இராமாயணத்தில் இல்லாத பகுதியாயிற்றே! வால்மீகி முனிவர் எழுதாத ஒன்றை உமது இராமாயணத்தில் புகுத்துவது குற்றமல்லவா? இதனை நாம் எப்படி அரங்கேற்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட கம்பர் பணிவோடு கைகூப்பி, “பெரியோர்களே! அடியேன் இதனைத் திட்டமிட்டுப் பாடவில்லை. மூலத்தில் இல்லாவிட்டாலும், பிரகலாதனை விட அந்த நாராயண நாமத்தை வேறு யார் முழுமையாக அறிந்திருக்க முடியும்? ‘குலந்தரும் செல்வம் தந்திடும்... நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று பாடிய நம் திருமங்கை ஆழ்வாரை விட, அந்த நாராயண நாமத்தின் உன்னதப் பெருமையைத் தமிழால் வேறு யார் இப்புவியில் பாடியிருக்க முடியும்? மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் திருமங்கை ...

28 - நம் சடகோபன்!

Image
28 - நம் சடகோபன்! ஆசாரியர் ஸ்ரீமந் நாதமுனிகளின் பிரபாவத்தையும், திருவாய்மொழி மற்றும் திருமொழித் திருநாட்களிலே அரையர்கள் எம்பெருமான் திருமுன்னே நிகழ்த்தும் அற்புத அரையர் சேவையின் மாண்புகளையும் பற்றி எத்தனை முறை கேட்டாலும், அது செவிகளுக்கு வற்றாத அமுதமாய் இனிமை பயக்கும் அல்லவா! நாதமுனிகளின் அபிமானச் சீடரான ஸ்ரீ உய்யக்கொண்டார் விவரிக்க, அதனை அணுக்கச் சீடரான மணக்கால் நம்பியும் ஏனையோரும் நேரில் கேட்ட அந்தப் பரவச அநுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவோம்! மறுநாள் விடிந்தது. மணக்கால் நம்பியும் ஏனைய சீடர்களும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் இராமாயண அரங்கேற்ற நிகழ்வைக் கேட்க ஆவலோடு, திருக்கோவில் வெளி மண்டபத்திலே ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். உய்யக்கொண்டார் வந்து ஆசனத்தில் அமர்ந்தபோது, அவர்தம் திருவடிகளிலே விழுந்து வணங்கிய சீடர்களில் ஒருவர் விநயத்துடன் எழுந்து, “ஆசாரியரே! நம்மாழ்வாரின் திவ்ய பாசுரங்களைக் கொண்டாடும் பொருட்டுத் திருமங்கை மன்னன் ‘திருவாய்மொழித் திருநாள்’ என்ற மாபெரும் உற்சவத்தை ஏற்படுத்தினார்; அது இன்றும் திருவரங்கத்தில் மகா வைபவமாகக் கொண்டாடப்பட்ட...